சித்திரை ,2, விரோதி வருடம். புதன் ,ஏப்ரல்,15, 2009
1.விருதுநகரில் பிரசாரம் செய்கிறார் வைகோ
ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ விருதுநகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் பிரசாரத்தை இன்று துவக்குகிறார். முன்னதாக அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு சென்ற வைகோவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட ராஜபாளையம் சிவலிங்காபுரத்தில் வைகோ தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார், சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து பிரசாரம் செய்யும் அவர் மாலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சுவாமிநாதபுரத்தில் இன்றைய பிரசாரத்தை முடிக்கிறார்.
2.தேசிய கட்சிகளை ஆதரியுங்கள் : மன்மோகன் அழைப்பு
"" பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றி தோல்விகளை கெடுப்பவர்களாக சுயேச்சை வேட்பாளர்கள், இருக்கின்றனர். எனவே, அவர்களை ஊக்குவிக்கக் கூடாது'' என்று, பிரதமர் மன்மோன் சிங் அழைப்புவிடுத்துள்ளார். மேலும், தேசிய கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்று கூறினார். தேசிய அரசியலில், மாநிலக் கட்சிகளின் பங்கேற்பு அதிகரித்துவருவது. இருப்பினும் லோக்சபா தேர்தலில் தேசிய கட்சிகளை தேர்வு செய்வதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்கும் உகந்ததாக அமையும். மாநிலக் கட்சிகள் பலம் வாய்ந்தவையாக அமையுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இருப்பினும் தற்போது, மாநிலக் கட்சிகளின் பங்களிப்பு நிலைநின்றுள்ளது. எனவே, மாநிலக் கட்சிகளும்,தேசிய கட்சிகளும் இணைந்து செயல்பட உருவாக்க வேண்டும் என்பதே உண்மை நிலையாக உள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் பாதுகாக்க, காங்கிரசை போன்ற நாடு முழுவதும் பரவி இருக்கும் தேசிய கட்சியால் முடியும் என்பாதல், இதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.
3.திருச்செந்தூர் முருகனுக்கு அன்னாபிஷேகம்
சித்திரை மாதப்பிறப்பையொட்டி, திருச்செந்தூர் முருகனுக்கு நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சித்திரை மாதப்பிறப்பையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோவில் நடை நேற்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, மற்ற கால பூஜைகள் தொடர்ந்தன. மேல வாசல் விநாயகர் கோவிலில் கணபதி பூஜை நடந்தது. காலை 10.30 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து அன்னாபிஷேகம் நடந்தது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் முருகனை தரிசித்தனர்.
http://www.tiruchendurmurugantemple.com/index.aspx
4.டிராவிட்டுக்கு ரூ. 8.45 கோடி
தென் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள ஐ.பி.எல்., "" டுவென்டி-20' தொடரில் அதிக சம்பளம் பெறுபவர், இந்திய வீரர் ராகுல் டிராவிட் தான். அவரது சம்பளம் ரூ. 8.45 கோடி. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், கடந்த ஆண்டு வீரர்கள் ஏலத்தில், இந்திய அணி கேப்டன் தோனி அதிக பட்சமாக ரூ. 6 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டார். ஆனால் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் தோனியை விட அதிகபட்ச விலைக்கு இங்கிலாந்து வீரர்களான பீட்டர்சன் (பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்), பிளின்டாப் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஆகியோர் தலா ரூ. 7.35 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டனர். சச்சின், கங்குலி, டிராவிட் உள்ளிட்டோர் "நட்சத்திர' வீரர்கள். இவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்கள் பங்கேற்கும் அணியில் அதிக பட்ச சம்பளம் பெறும் வீரரை விட, 15 சதவீதம் அதிகமான சம்பளம் இவர்களுக்கு வழங்க வேண்டும். இதன்படி பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் பீட்டர்சன் விலையை விட அதிகமாக சுமார் ரூ. 8.45 கோடி சம்பளம் பெற உள்ளார் டிராவிட். சென்னை அணி சார்பில் பிளின்டாப் ரூ. 7.35 கோடிக்கு வாங்கப்பட்ட போதும், கேப்டன் தோனி நட்சத்திர வீரர் இல்லாததால் அவருக்கு ரூ. 6 கோடி மட்டும் தான் கிடைக்கும்.
5. பிரதமர் விருந்து: அத்வானி புறக்கணிப்பு
புதுடில்லி: லோக்சபா நாயகர் சோம்நாத் சட்டர்ஜிக்கு சிறப்பு செய்யும் விதமாக, பிரதமர் ஏற்பாடு செய்த விருந்தில் அத்வானி மற்றும் இடதுசாரித் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. லோக்சபா நாயகர் சோம்நாத் சட்டர்ஜியின் பதவிக் காலம் முடியும் தறுவாயில் உள்ளதால், பிரதமர் மன்மோகன் சிங் சார்பில் விருந்தளித்து சிறப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விருந்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் அத்வானி மற்றும் இடதுசாரித் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து, செய்தியாளர்கள் கேட்டதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், "எல்லா கட்சித் தலைவர்களும் விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். வருவதும், வராமலிருப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்' என்றார். இடதுசாரிகள் கூறுகையில், "முதல்கட்ட தேர்தல் பணியில் இருப்பதால், கட்சித் தலைவர்கள் யாரும் டில்லியில் இல்லை. இதனால், விருந்தில் கலந்துகொள்ள முடியவில்லை' என்றனர். அத்வானி கூறுகையில், "பா.ஜ., கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், விருந்தில் பங்கேற்க முடியாது' என்றார்.
6.தனி நபர் விமர்சனங்களை அரசியலில் விரும்பவில்லை: பிரதமர்
புதுடில்லி: தனி நபர் விமர்சனங்களை அரசியலில் தாம் விரும்பவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக பாகிஸ்தான் மோதுமான கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது என்றும், ஆனால் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ., பிரதமர் வேட்பாளர் அத்வானி தம்மை பலவீனமான பிரதமர் என்று விமர்சித்து இருந்தார், இதற்கு பதலிளித்த அவர் தனிநபர் விமர்சனங்களை அரசியலில் தாம் விரும்பவில்லை என்றும் கூறினார்.
7.பிரதமர் மன்மோகன்சிங் பஞ்சாப் சிங்கம் : ராகுல் புகழாரம்
படிண்டா : பஞ்சாப் மாநிலம் படிண்டாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் பிரதமர் பலவீனமானவர் அல்ல அவர் பஞ்சாபின் சிங்கம் என மன்மோகன்சிங்குக்கு புகழாரம் சூட்டியுள்ளார். ஐ.மு.., கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மன்மோகன் சிங் பஞ்சாப் சிங்கம் என்றும் இந்தியாவின் பெருமிதம் எனவும் படிண்டா தொகுதி வேட்பாளர் ரனீந்தர் சிங்கை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த ராகுல் கூறியுள்ளார்.
8.பதவி மக்களிடம் இருந்து என்னை பிரித்து விட்டது: அழகிரி உருக்கம்
திண்டுக்கல்: பதவி மக்களிடம் இருந்து என்னை பிரித்து விட்டது என தி.மு.க., தென்மண்டல அமைப்பு செயலர் அழகிரி தெரிவித்துள்ளார். திண்டுக்கலில் நடைபெற்ற தி.மு.க., செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அழகிரி, தான் மக்களுள் ஒருவனாக இருந்ததாகவும், பதவி மக்களிடம் இருந்து தன்னை பிரித்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், மக்கள் எழுச்சி தான் தி.மு.க., வின் எழுச்சி என்றும் அவர் தெரிவித்தார்.
This News section was gathered from popular websites and this not made by private individual.
No comments:
Post a Comment