Wednesday, March 25, 2009

தமிழக எம்.பி.,க்கள் 'வாய் திறந்த' வரலாறு

தமிழக எம்.பி.,க்கள் 'வாய் திறந்த' வரலாறு : பார்லியில் ஒரு கேள்வி கூட கேட்காத தங்கபாலு:


பார்லிமென்ட் நடவடிக்கைகளில் முக்கியமான நேரமாக கருதப்படுவது கேள்வி-பதில் நேரம். ஒவ்வொரு நாளும் காலை அவை கூடியதும் முதல் பணியாக எடுத்துக் கொள்ளப்படும் இந்த நேரத்தின்போது, எம்.பி.,க்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பர்.பல்வேறு எம்.பி.,க்களும் முன்கூட்டியே கேள்விகளை அனுப்பி அந்த கேள்விகள் பார்லிமென்ட் அலுவலக அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு அதன்பின், நட்சத்திர குறியிட்ட கேள்விகள் மற்றும் நட்சத்திர குறியிடப்படாத கேள்விகள் என்று பிரிக்கப்படும்.


நட்சத்திர குறியிட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாக பதிலளிப்பர். நட்சத்திர குறியில்லாத கேள்விகளுக்கு எழுத்து மூலமாக சம்பந்தப்பட்ட எம்.பி.,க்களுக்கு பதிலளிக்கப்படும்.அந்த வகையில், தமிழகத்திலிருந்து கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட 39 எம்.பி.,க்களும் பார்லிமென்டில் எத்தனை கேள்விகளை அவையில் எழுப்பினர் என்பது பற்றிய விவரம் இது.கடந்த ஐந்து ஆண்டுகளில் கேள்வி நேரத்தின் போது சேலம் தங்கபாலு, நாகை விஜயன், பொள்ளாச்சி கிருஷ்ணன், திருப்பத்தூர் வேணுகோபால் ஆகிய எம்.பி.,க்கள் ஒரு கேள்வி கூட கேட்காமல் இருந்துள்ளனர்.


ராதிகா செல்வி 2004, 2005, 2006 ஆகிய மூன்று ஆண்டுகள் வெறும் எம்.பி.,யாக இருந்துவிட்டு அமைச்சராக ஆனார். எம்.பி.,யாக இருந்த போது நான்கு கேள்விகள் கேட்டுள்ளார்.சிதம்பரம், பாலு, ராஜா, வேலு, இளங்கோவன், வேங்கடபதி, ரகுபதி, பழனிமாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் அமைச்சர்கள். இவர்கள் கேள்வி கேட்கமுடியாது. பதில் மட்டுமே அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில், ரயில்வே துறை பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் அவையில் இணையமைச்சர் வேலு மட்டுமே முழுக்க முழுக்க பதிலளித்தார். லாலுவின் வேலை வெறுமனே பட்ஜெட் படிப்பது மட்டும் தான்.

No comments: